இலங்கையில் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுடகொட வீதியில் உள்ள காலி இடத்தில் ஒருவரின் சிதைக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ரத்மலானை மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் கடந்த 30 ஆம் திகதி இரவு வீட்டை விட்டு வெளியேறியிருந்தார், வீடு திரும்பாதது குறித்து அவரது சகோதரர்களில் ஒருவரால் கல்கிசை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சடலம் நீதவான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக களுபோவில மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலையைச் செய்த சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)