படகு விபத்தில் காணாமல் போன இரண்டு இந்தோனேசிய மீனவர்களின் உடல்கள் மீட்பு
கடந்த வாரம் படகு விபத்தில் காணாமல் போன இரண்டு இந்தோனேசிய(Indonesia) மீனவர்களின் உடல்களை மீட்டதாக போர்த்துகீசிய((Portuguese) அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிசம்பர் 14 அன்று போர்டோ(Porto) நகருக்கு வடக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது.
போர்த்துகீசிய மற்றும் ஸ்பானிஷ்(Spanish) விமானங்கள், கடல்சார் காவல்துறை மற்றும் உயிர்காக்கும் படகு குழுவினரின் உதவியுடன் காணாமல் போன மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு சடலங்களும் வியானா டோ காஸ்டெலோ(Viana do Castelo) மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் கண்டெடுக்கப்பட்டதாக தேசிய கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது.




