டொமினிகன் குடியரசில் படகு மூழ்கி விபத்து – நால்வர் மரணம்

கரீபியனில் உள்ள டொமினிகன் குடியரசின் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் நான்கு அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர், சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டொமினிகன் சிவில் பாதுகாப்பு அதிகாரி, படகில் இருந்து மேலும் 17 பேர் மீட்கப்பட்டனர், இது சுமார் 40 பேரை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் பிரதேசமான புவேர்ட்டோ ரிக்கோவை நோக்கிச் சென்றது என தெரிவித்துள்ளார்.
கரீபியன் நாட்டின் கடற்படை 10 டொமினிகன்களையும் ஏழு ஹைட்டியர்களையும் மீட்டதாகக் தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.
(Visited 1 times, 1 visits today)