அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல் – 5 பேர் மரணம்
அமெரிக்காவை அச்சுறுத்திய கடும் பனிப்புயலால் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
Missouri, Kansas மாநிலங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் சில பகுதிகளில் 10 ஆண்டு காணாத அளவு பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகின.
மத்திய, தென் மாநிலங்களில் பயணம் செய்வதற்கான சூழல் அபாயகரமாய் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்துப் பள்ளிகளும் அரசாங்க அலுவலகங்களும் மூடப்பட்டன. சுமார் 300,000 பேரின் வீடுகளில் மின்சாரம் இல்லை. பல மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்துக்கு மாறாகத் தட்பநிலை ஏழு முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று வானிலை ஆய்வக அதிகாரிகள் கூறுகின்றனர்.
60 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.