ஆசியா

பாகிஸ்தானின் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பு : 20 பேர் பலி!

பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாட்டின் பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரின் கட்சி அலுவலகம் அருகே முதல் குண்டுவெடிப்பு  நிகழ்ந்தது.

இதில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், கில்லா சைஃப் உல்லா மாவட்டத்தில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்தது, இதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

வெடிப்புச் சம்பவங்களால் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்புச் சம்பவங்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள பின்னணியில் இந்த வெடிப்புகள் தொடர்பாக உலகின் கவனம் பாகிஸ்தானின் மீது குவிந்துள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!