ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு பாஜகவின் கொடுங்கோல் ஆட்சியாளர்களே காரணம் – ஸ்டாலின் விசனம்
பாஜகவின் கொடுங்கோல் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு கூஜா தூக்கும் அதிமுக அடிமைகளும் நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரச விழாவொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று இதனைத்
தெரிவித்துள்ளா்ர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு குடும்பமும் என்று ஒட்டுமொத்தமாக தமிழ்நாடும் வளர வேண்டும் என்று உழைக்கிறோம்.
ஒட்டுமொத்த நாடே திரும்பி பார்க்கின்ற வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டியால் வரி உரிமை இல்லை.
எமக்கு வரவேண்டிய நிதியும் வழங்கவில்லை. குடைச்சல் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்ற ஆளுநர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்.
தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுகின்ற துரோகிகள்.
துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து, சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அத்தனை சவால்களையும் முறியடித்து நாம் முன்னேறியிருக்கிறோம்.
இந்த வளர்ச்சிதான் பலருடைய கண்களை கூச செய்கிறது. வயிறு எறிகிறது. அதனால் தான், எப்படியாவது தமிழ்நாட்டிற்கு
அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.
பொறுப்புள்ள, ஒன்றிய அமைச்சர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட, அத்தனை வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள். தமிழ்நாட்டு மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால், அதுமூலமாக, வட மாநிலங்களில் வாக்குகள் பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.
வளர்ச்சி தொடர்பான எந்த வரைபடைத்தை எடுத்தாலும், இந்தியாவின் தெற்கு பகுதி வளமாக இருப்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாஜக ஆதரவாளர்களே, இந்த ஒன்றிய அரசை கழுவி ஊத்துகிறார்கள். தலைநகர் டெல்லியை மூச்சுத்திணற வைக்கும் மாசடைந்த காற்று, இந்திய ரூபாய் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி, பாஜக அரசுகள் கட்டுகின்ற கட்டடங்கள், சிலைகள், மேம்பாலங்கள் எல்லாம் சிறிது நாட்களிலேயே இடிந்து விழுகிறது.
வறுமையை ஒழிப்பதிலும், கிராம மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதிலும் நூறு நாள் வேலைத்திட்டம் பெரிய சாதனையை படைத்தது.
ஆனால், இப்போது பாஜக அந்த திட்டத்தில் காந்தியடிகளின் பேரையும் எடுத்துவிட்டார்கள். 100 நாள் வேலை மக்களின் உரிமை என்று இருந்ததையும்
தூக்கிவிட்டார்கள்” என்றார்.





