முதல் முறையாக ஒரு இலட்சத்தை தாண்டிய பிட்காயினின் பெறுமதி : மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின், முதல்முறையாக $100,000-க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில் பிட்கொய்ன் துறைகளில் ஏற்பட்ட மிகப் பெரிய வளர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
பிரித்தானிய நேரப்படி அதிகாலை 04.10 மணிக்கு Cryptocurrency மதிப்பு $103,280 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 7.9% உயர்ந்ததாக நாணய மாற்றி XE.com தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய நாளில் இருந்து பிட்காயினின் விலை 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)