இந்தியா

மகாராஷ்டிர அமைச்சரின் கொலைக்கு பொறுப்பேற்ற பிஷ்னோய் குழு

இந்தியாவின் மகாராஸ்டிர மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டமைக்கு, சிறையில் உள்ள குற்றக்குழுவின் தலைவரான லோரன்ஸ் பிஸ்னோயின் குழு பொறுப்பேற்றுள்ளது.

பாபாவுக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையிலும் துப்பாக்கித்தாரிகளால் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ள பிஸ்னோய் குழு ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கும் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சல்மான் கானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரையில், தெரியவரவில்லை.

எனினும், பாபா சித்திக்கின் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்காக அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!