அமெரிக்காவில் 2வது நபருக்கு பறவைக் காய்ச்சல் – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
அமெரிக்காவில் மேலும் ஒருவருக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அங்கு மார்ச் மாதம் பறவைக் காய்ச்சல் வைரஸ் முதன்முறையாக மாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு மனிதர்களிடையே ஏற்பட்ட இரண்டாவது சம்பவம் அதுவாகும். அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் அதனைத் தெரிவித்தது.
ஏப்ரல் மாதத்தில் டெக்சஸ் மாநிலப் பால் பண்ணை ஊழியருக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அண்மையில் மிச்சிகன் (Michigan) மாநிலப் பால் பண்ணை ஊழியருக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது.
ஆயினும் பொதுமக்களுக்குக் கிருமி பரவும் வாய்ப்புகள் குறைவு என்று நிலையம் கூறியது.
இதுவரை பறவைக் காய்ச்சல் மனிதருக்கு மனிதர் பரவுவதைக் கண்டதில்லை என்றும் நிலையம் தெரிவித்தது.
(Visited 5 times, 1 visits today)