இங்கிலாந்தில் சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்ற மசோதா தாக்கல்

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நாட்டில் தயாரான கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் ஆலோசித்து வந்தது. அதன்படி நாட்டின் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் முக்கிய துறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அதேபோல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வினியோகஸ்தர்களை தடை செய்யவும் இந்த மசோதா வழி செய்யும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 16 times, 1 visits today)