வட அமெரிக்கா

இஸ்ரேலின் புதிய சண்டை நிறுத்த திட்டத்தை ஏற்க ஹமாஸ் தரப்பிற்கு அமைப்பு விடுத்துள்ள பைடன்

ஹமாஸிடம் சிக்கியுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக இஸ்ரேல் புதிய சண்டை நிறுத்தத் திட்டத்தை முன்வைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (ஜூன் 1) தெரிவித்துள்ளார்.இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இதுவே சிறந்த வழி என்று அவர் கூறியுள்ளார்.

“போர் முடிவுக்கு வந்து அடுத்த நாள் தொடங்க வேண்டிய நேரம் இது,” என்று பைடன் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவிருப்பதால் நெருக்கடியில் உள்ள பைடனுக்கு எட்டாவது மாதத்தை எட்டியுள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எகிப்து, கத்தார் மற்றும் இதர தரப்புகள் நடுவர்களாகச் செயல்பட்டு சண்டை நிறுத்தத்துக்கு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வருவதாக இல்லை. பேச்சுவார்த்தைக்கு அடிக்கடி முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது. இதற்கு இருதரப்பும் மற்றொன்றைக் குற்றம்சாட்டி வருகின்றன.

இஸ்ரேல் பல முறை தாக்குதல்களை நடத்தி ராஃபாவுக்குள் புகுந்துள்ள வேளையில் புதிய உத்தேச திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு போரைக் கையாளும்விதம் குறித்து உள்ளூர் மக்களே எதிப்புக்களை தெரிவித்து வருகின்றனர். பிணைக் கைதிகள் விடுவிக்கப்படாததால் உள்ளூரில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதால் உலக நாடுகளும் நெட்டன்யாகுவுக்கு நெருக்குதலைக் கொடுத்து வருகின்றன.

இதற்கிடையே பைடன் அறிவித்துள்ள புதிய உத்தேசத் திட்டத்துக்கு ஹமாஸ் அறிக்கை வாயிலாக பதிலளித்துள்ளது.நிரந்தரமான சண்டை நிறுத்தம், இஸ்ரேலியப் படைகள் மீட்பு, காஸா மறுநிர்மாணம் ஆகியவற்றின் அடிப்படையில் உத்தேசத் திட்டம் இருந்தால் ஆக்ககரமான முறையில் அதில் பங்கேற்பதாக ஹமாஸ் அறிக்கையில் கூறியுள்ளது.

இரு தரப்பிலும் கைதிகளின் பரிமாற்றம் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!