பௌத்த மதத்தை அவமதித்த பிக்குவிற்கு விளக்கமறியல்
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது.
சந்தேகநபர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கருத்துக்கள் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர் ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளார் என அறிவிக்குமாறும் விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், தலைவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.