விளையாட்டு

74 ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த டெஸ்ட் கேப்டன்.. டெம்பா பவுமா புதிய சாதனை

2024-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை சிறப்பாக வழிநடத்திய டெம்பா பவுமா, முதல் அணியாக WTC இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

தென்னாப்பிரிக்கா கேப்டனாக மாறிய பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் டெம்பா பவுமா, சமீபத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 7 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 4 அரைசதங்களுடன் 54 சராசரியுடன் 609 ரன்களை குவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கேப்டனாக தொடர்ந்து வெற்றிகளை குவித்துவரும் டெம்பா பவுமா, தென்னாப்பிரிக்காவின் சிறந்த கேப்டன்கள் வரிசையில் தன்பெயரை பதிக்கவுள்ளார்.

74 ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த டெஸ்ட் கேப்டன்..
தென்னாப்பிரிக்கா அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட டெம்பா பவுமா, வழிநடத்திய 8 போட்டிகளில் 7 வெற்றி மற்றும் 1 டிராவுடன் தோல்வியே தழுவாத கேப்டனாக ஜொலித்துவருகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவுசெய்த டெம்பா பவுமா தென்னாப்பிரிக்காவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றார்.

இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிக்கில்டனின் அபாரமான இரட்டை சதத்தின் உதவியால் 615 ரன்கள் குவித்திருக்கும் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தானை 64/3 என்ற நிலையில் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியையும் டெம்பா பவுமா வெல்லும் பட்சத்தில், 1951-க்கு பிறகு முதல் 9 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளை பதிவுசெய்த முதல் டெஸ்ட் கேப்டன் வரலாற்று சாதனையை படைக உள்ளார். 1951-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் லிண்ட்சே ஹாசெட்டால் இந்த சாதனையை இதற்கு முன்னர் படைத்திருந்தார்.

அப்படியானால் WTC இறுதிப்போட்டியிலும் வென்றால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கேப்டன் வரலாற்றில் க்ரீம் ஸ்மித்தின் லெகஸியை டெம்பா பவுமா உடைப்பார்.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!