செய்தி

கூகுள் மேப்ஸ் மூலம் கிடைக்கும் நன்மைகள்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் மாற்ற தேவையான பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.

முன்பின் தெரியாத இடத்திற்கு செல்கையில், வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய, அருகில் இருக்கும் கடைகள் அல்லது வழியில் காணும் நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம். ஆனால் இப்பொழுது கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்.

கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், கூகுள் மேப்ஸ், பொதுவாக சிறந்து வழிகாட்டியாகவே செயல்பட்டு வருகிறது.

கூகுள் மேப்ஸ் (Google Maps) ஒரு வரைபடம் மட்டுமல்ல, பயணத்தின் போது பல தகவல்களை வழங்கும் மிகவும் பயனுள்ள செயலி. உங்கள் இருப்பிடத்தில் மட்டுமின்றி, புதிய நகரத்திற்கு சென்றாலும் உங்களுக்கு உதவக்கூடிய பல அம்சங்களை Google Maps கொண்டுள்ளது. கூகுள் மேப்ஸின் சில அம்சங்கள் உங்கள் வேலையை எளிதாக்கும். அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

See also  இலங்கையில் பன்றிக்காய்ச்சல் பரவல் வேகம் - கடுமையாகும் சட்டம்

வழிகாட்டி (நேவிகேஷன்)

வழிகாட்டி நேவிகேஷன் கூகுள் மேப்ஸின் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சமாகும். கூகுள் மேப்பில், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் விலாசத்தை குறிப்பிட்டால் போதும், இலக்கை அடைய நீங்கள் போக வேண்டிய தெளிவாக காட்டும். குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக செல்வதற்கான எளிதான வழியை Google வரைபடம் உங்களுக்குச் சொல்லும்.

பொது போக்குவரத்து குறித்த தகவல்

நீங்கள் பேருந்து, ரயில் அல்லது மெட்ரோவில் பயணிக்க விரும்பினால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பங்களையும் Google Maps காண்பிக்கும்.

போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்

கூகுள் மேப்ஸ் ட்ராஃபிக் அப்டேட்ஸ் தகவல்கள் மூலம் நீங்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம். போக்குவரத்து நெரிசல் எங்குள்ளது என்பது குறித்து முன்கூட்டியே தகவல்களை வழங்குவதால், அந்த வழிகளை தவிர்ப்பதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இது மிகவும் பயனுள்ள அம்சமாகும்.

போக்குவரத்து சோதனைகள் குறித்த தகவல்கள்

கூகுள் மேப்ஸில் நீங்கள் செல்லும் வழியில், போக்குவரத்து துறை சோதனைகள் மேற்கொள்ளும் பகுதிகள் குறித்த தகவலையும் கொடுக்கும். இதனால், அபராதம் விதிக்கப்படும் அபாயம் அதிக உள்ள சாலைகளைத் தவிர்க்கலாம். அல்லது எச்சரிக்கையாக இருக்கலாம் வழியைக் கண்டறிந்த பிறகு, பாதை ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் வழியைத் கஸ்டமைஸ் செய்வதன் மூலம் இதனை அறியலாம்.

See also  அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - வெற்றியாளரை தேர்வு செய்த நீர்யானை

வீதிக் காட்சி (Street View)

வீதிக் காட்சி மூலம் நீங்கள் விரும்பிய பகுதியின் 360 டிகிரி காட்சியையும் பார்க்கலாம். அந்த இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இது உதவும். இதனுடன், 3டி மாடலையும் பார்க்க அனுமதிக்கும் புதிய அம்சம் இது.

குறுகிய சாலைகள் குறித்த அலர்ட்

செயற்கைக்கோள் படங்கள், ஸ்ட்ரீட் வியூ போன்ற அமசங்களை பயன்படுத்தி, சாலையின் அகலத்தை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் வாகனங்களுக்கு வழிகாட்டும் அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் செல்லும் வழியில் உள்ள குறுகலான சாலைகள் குறித்த எச்சரிக்கையை கூகுள் உடனே வழங்கும். இதனால் நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்கள் வேறு வழியை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

வேக எச்சரிக்கை (Speed ​​Alert)

போக்குவர்த்து விதியில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை விட வேகமாக வாகனம் ஓட்டும்போது, கூகுள் மேப்ஸின் வேக எச்சரிக்கை அம்சம் உங்களை எச்சரிக்கும். இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய, Google Maps செயலியின் செட்டிங்ஸ் பிரிவுக்கு சென்று, வேக எச்சரிக்கையை ஆன் செய்யவும்.

See also  இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு ஹிஸ்புல்லா பதிலடி

ஆஃப்லைன் வரைபடங்கள்

கூகுள் மேப்ஸை ஆஃப்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் தொலைபேசியில் இணைய இணைப்பு இல்லாதபோதும் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும் போது இந்த அம்சம் கை கொடுக்கும். Google வரைபடத்தில் அருகிலுள்ள உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பார்களையும் நீங்கள் காணலாம்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content