பாலஸ்தீனம் ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படும் – பெல்ஜியம் அறிவிப்பு

பாலஸ்தீனம் ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்டும் என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மாக்சிம் பிரீவோட் அறிவித்தார்.
இந்த மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில், பாலஸ்தீன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும் என்று பெல்ஜியம் அறிவித்துள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மாக்சிம் பிரீவோட், குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்குக் கரை குடியேற்றங்களில் இருந்து இறக்குமதி தடை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் போன்ற “உறுதியான தடைகள்” இஸ்ரேல் மீது பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டம் செப்டம்பர் 9ஆம் திகதி நியூயார்க்கில் தொடங்கவுள்ளது. தற்போது 147 நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு அரசாக ஏற்கனவே அங்கீகரித்துள்ளன.
(Visited 3 times, 3 visits today)