ஒரு மணி நேரத்திற்கு 4000 ரூபாவிற்கும் மேல் சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்
ஒரு பிச்சைக்காரனின் மணிநேர வருமானம் 4000 ரூபாவைத் தாண்டும் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் கூறுகிறார்.
பல்கலைக்கழகம் நடத்திய சமூக ஆய்வின் முடிவுகளை மேற்கோள் காட்டி இணைய சேனலொன்றில் இணைந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய பேராசிரியர், பிச்சை எடுப்பது தற்போது தொழிலாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.
இதற்காக பலர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் உண்மையாகவே தேவையுடையவர்கள் சுதந்திரமாக பிச்சை எடுக்கும் சூழல் இலங்கையில் தற்போது இல்லை எனவும் பேராசிரியர் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட இடங்களில் தங்கியிருக்கும் பிச்சைக்காரர்களை அவ்விடத்திலிருந்து அகற்றினால், அந்தந்த இடங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய பிச்சைக்காரர்களை மாற்றுவதற்கு இந்த பிச்சைக்காரர்கள் மற்றும் குழுக்கள் செயற்படும் என பேராசிரியர் மயூர சமரக்கோன் இந்தக் கலந்துரையாடலில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.