சீனக் கப்பல் வரும் முன்பு இந்திய பாதுகாப்பு அமைச்சர் திடீரென இலங்கை வருகின்றார்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்த வார இறுதியில் தீவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தின் போது திருகோணமலைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய சீன Xiang Six கப்பல் கொழும்பு துறைமுகத்தை வரவுள்ள பின்னணியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு இலங்கைக்கான விஜயத்திற்கு தயாராகி வருகின்றார்.
அது தொடர்பில் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளதுடன், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு குறித்த சீனக் கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் இந்தியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவின் யுவன் வேன் ஃபைவ் கப்பல் இலங்கைக்கு வந்தபோது, இந்திய அரசும் இது தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தியாவின் ஒரு பகுதியை இணைத்து சீனா வெளியிட்டுள்ள சமீபத்திய வரைபடத்தின் அடிப்படையில், இரு தரப்பினருக்கும் இடையே பெரும் சர்ச்சையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ள இந்தப் பின்னணியில் சீனக் கப்பலுக்கு இந்த நாட்டு கடல் எல்லைக்குள் பிரவேசிக்க இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.