தென்கொரியாவில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மூட்டைப் பூச்சிகள்!
தென்கொரியாவில் மத்திய, உள்ளூர் அரசாங்க நிறுவனங்கள் மூட்டைப் பூச்சிகளை ஒழிக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்ற நிலையில் நாடு முழுவதும் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் Keimyung பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் ஒரு மாணவரை மூட்டைப் பூச்சி கடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் மூட்டைப் பூச்சிகளும் அதன் குட்டிகளும் நீராவிக் குளியலில் கண்டுபிடிக்கப்பட்டது.
பூசியோன், சோல், பூசான் நகரங்களிலும் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை குறித்து புகார்கள் கிடைத்துள்ளன. மூட்டைப் பூச்சிகள் பெருகுவதைத் தடுக்கும் வழிமுறைகளை நகரின் இணையத்தளத்தில் பதிவிடப்போவதாகப் பூசான் அரசாங்கம் தெரிவித்தது.
சோல் அரசாங்கமும் மூட்டைப் பூச்சிகள் பெருகுவதைத் தடுக்கவும் அதனைச் சமாளிக்கவும் வழிமுறைகளை மக்களுக்கு வழங்கியது.
3,175 இடங்களில் சிறப்புக் கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சோல் நகரம் திட்டமிட்டுள்ளது. இவ்வாண்டின் இறுதிவரை அது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.