சிலர் தங்களின் தேவைகள் என்னவென்பதை வெளிப்படையாகக் கூறும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் சிலரோ மைண்ட் கேம்களை சிறப்பாக விளையாடுகிறார்கள் மற்றும் அதன்மூலம் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
அவர்கள் எப்படி அவ்வாறு செய்கிறார்கள் என்பது மற்றவர்களுக்கு ஆச்சரியப்படுத்தும். அவர்கள் எதைச் சொன்னாலும் அது முன்னுரிமையின் அடிப்படையில் விரைவாக நிறைவேற்றப்படும். அப்படியான நான்கு ராசி காரர்கள் யார் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மைண்ட் கேம்களை விளையாடி மக்களை அவர்களின் வார்த்தைகளை பின்பற்ற வைக்கிறது. அவர்கள் மிகவும் நம்பகமானவராகக் காணப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் மற்றவர்களை நம்ப வைக்கிறார்கள். அவர்களின் மைண்ட் கேம்களை ஒருபோதும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மேலும் அவர்கள் செய்வது மற்றவரின் நலனுக்காக என்று தோன்றும் வகையில் அதனை செயல்படுத்துகிறார்கள்.
ரிஷபம்
மைண்ட் கேம்களை விளையாடுவதில் ரிஷப ராசிக்காரர்களும் சிறந்தவர். அவர்கள் உங்களை ஒரு கற்பனையான உலகத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அங்கு அவர்கள் தங்கள் தந்திரத்தின் மூலமும் சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் தங்கள் வேலையை சாதித்துக் கொள்வார்கள். இவர்கள் அருகில் இருக்கும் போது மற்றவர்கள் அவர்களுக்காக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.
கடகம்
கடக ராசிக்கார்கள் மைண்ட் கேம் ஆடுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். நீங்கள் அவர்களின் மைண்ட் கேம்களுக்கு இரையாகி விட்டீர்கள் என்பதை உணர முடியாத அளவிற்கு அவர்கள் உங்கள் மூளையை கண்ட்ரோல் செய்வார்கள். அவர்கள் யுக்திகள் எப்போதும் குறைபாடற்றது மற்றும் கண்டுபிடிக்க இயலாதது. உங்களுக்கு கடக ராசி நண்பர்கள் இருந்தால் அவர்களின் தந்திரங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
கன்னி
கடக ராசிக்காரர்களைப் போலவே கன்னி ராசிக்காரர்களும் உங்கள் மூளையுடன் விளையாடுவார்கள். அவர்கள் உங்களை நம்பிக்கையுடன் அழைத்துச் சென்று உங்களுடன் அனைத்து மன விளையாட்டுகளையும் விளையாடுவார்கள். அவர்களின் இனிமை நீங்கள் அவர்களின் உண்மையான முகத்தைப் பார்க்க முடியாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் இந்த செயல்பாட்டில் அவர்கள் தொடர்ந்து உங்களைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவார்கள்.