மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை
இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதாக கூறும் ஜனாதிபதி அவர் அவ்வாறு நோக்குவாரானால் தமது பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப்பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நேற்று மாலை கொட்டும் மழையிலும் கால்நடை பண்ணையாளர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 20தினங்களாக வீதியில் போராடிவருகின்றனர்.தமது கால்நடைகளையும் குடும்பங்களையும் கவனியாது 20 நாட்களாக வீதிகளில் போராடிவருகின்றனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15) காலை முதல் போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று மாலை கொட்டும் மழைக்கும் மத்தியிலும் பண்ணையாளர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி தமது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தினை நடாத்தினார்கள்.
தமது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாகவும் சில அரசியல்வாதிகளும் தமது பிரச்சினை குறித்து அக்கரையற்ற நிலையில் உள்ளதாகவும் இங்கு பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.