இலங்கை செய்தி

அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்தவுடன் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட பசில்

மக்களை ஏமாற்ற தமது கட்சி ஒருபோதும் முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று காலை நாடு திரும்பிய அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வரும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை தாம் ஏற்பாடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என நம்புவதாக தெரிவித்த பசில் ராஜபக்க்ஷ, ஒவ்வொரு தேர்தலும் சவாலாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் மக்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்கள் சொல்வதைச் செய்கிறோம். சில இடங்களில் தவறு செய்கிறோம். மக்கள் நாங்கள் சொல்வதை ஏற்க மாட்டார்கள். சில சமயங்களில் மக்கள் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை. அவற்றை நாங்கள் திருத்துகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!