விவாகரத்து வதந்திகளை முடிவுக்கு கொண்டு வந்த பராக் ஒபாமா –மிச்செல் தம்பதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முன்னாள் முதல் பெண்மணி மிச்சல் ஒபாமா தங்களது விவாகரத்து குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்றதன் மூலம், இவர்களுக்கிடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
மிச்சல் ஒபாமா தனது சகோதரருடன் இணைந்து தொகுக்கும் ஒரு நிகழ்ச்சியில், பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் பேச்சுவார்த்தையில், இருவரும் நகைச்சுவை கலந்து பேசினர். பரஸ்பரம் அன்பும் புரிந்துணர்வும் உள்ள குடும்ப வாழ்க்கையை அவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது தெளிவாகும் வகையில் பேசியது, சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளை நிராகரிக்கச் செய்தது.
இந்த நிகழ்விற்கு முன்பு, பராக் ஒபாமா மட்டும் முன்னாள் ஜனாதிபர் ஜிம்மி கார்டரின் இறுதிச் சடங்கிலும், டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றது, மிச்சல் தவிர்ப்பதைத் தொடர்ந்து வதந்திகளுக்கு தூண் விட்டது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் இருவரும் உற்சாகமாகப் பங்கேற்று, தங்கள் உறவின் நிலையை நேரடியாகவும் நகைச்சுவையுடனும் வெளிப்படுத்தியதால், விவாகரத்து குறித்து பரவிய வதந்திகள் அடியோடு முடிவடைந்துள்ளன.
இதற்கான சமூக ஊடக எதிர்வினைகளும் பெரும்பாலும் ஆதரவு மற்றும் பாராட்டாகவே இருந்தது. “அவர்கள் இன்னும் ஒரு சக்திவாய்ந்த ஜோடி என்பதை மீண்டும் நிரூபித்தனர்,” என ஒரு ரசிகர் குறிப்பிட்டார்.