வட்டி விகிதங்கள் குறித்து பாங்க் ஆஃப் இங்கிலாந்து வெளியிட்ட அறிவிப்பு!! குறைவதற்கான வாய்ப்புள்ளதா?
பாங்க் ஆஃப் இங்கிலாந்து வட்டி விகிதங்களில் ஒரு குறைப்புக்கு நெருக்கமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பணவியல் கொள்கைக் குழு வட்டி விகிதத்தை 5.25 வீதம் என்ற நிலையில் தொடர்ச்சியாக பேண வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்நிலையில் தற்போது 09 நபர்களைக் கொண்ட பணவியல் கொள்கைக் குழுவின் மற்றொரு உறுப்பினர் இந்த மாதம் குறைந்த கடன் செலவுகளுக்கு சாதகமாக வாக்களித்துள்ளார்.
ஆகவே வட்டி விகிதத்தை குறைப்பதற்கு சாதகமாக இரு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், சில வேளைகளில் அடுத்த மாதத்தில் வட்டி விகிதங்கள் குறைப்படலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாங்க் ஆஃப் இங்கிலாந்தானது UK பொருளாதாரத்திற்கான புதிய கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு வலுவாக இருக்கும் என்றும் வேலையின்மை மற்றும் பணவீக்க விகிதங்கள் முன்பு எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தின் CPI விகிதம் அதன் 2% இலக்குக்கு உடனடியாகக் குறையக்கூடும் என்று கூறப்படுகிறது.
பணவீக்கம் பற்றிய ஊக்கமளிக்கும் செய்திகளை நாங்கள் பெற்றுள்ளோம், அடுத்த இரண்டு மாதங்களில் இது எங்களின் 2% இலக்கை நெருங்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். வட்டி விகிதங்களைக் குறைக்கும் முன் பணவீக்கம் குறைவாக இருக்கும் என்பதற்கான கூடுதல் ஆதாரங்களைப் பார்க்க வேண்டும் என கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி தெரிவித்துள்ளார்.