அடுத்த வருடம் ஆணுறை பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வங்கதேசம்
இந்தியாவுக்கு(India) எதிரான மாணவர் தலைவர் ஷெரிப் ஒஸ்மான் ஹாடியின்(Sharif Osman Hadi) மரணத்திற்குப் பிறகு ஏற்கனவே அதிகரித்து வரும் குழப்பங்களுக்கு மத்தியில் வங்கதேசத்தில்(Bangladesh) ஆணுறை பற்றாக்குறை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி மற்றும் மனிதவள பற்றாக்குறை காரணமாக அடுத்த ஆண்டு குறைந்தது ஒரு மாதமாவது ஆணுறை கிடைக்காது என்று தி டெய்லி ஸ்டார்(The Daily Star) குறிப்பிட்டுள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு இயக்குநரகம்(DGFP), அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆணுறைகளை விநியோகிக்க முடியாமல் போகலாம் என்பதால் வங்கதேசத்தின் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு இயக்குநரகம் நாடு முழுவதும் ஐந்து வகையான கருத்தடை மருந்துகளை இலவசமாக வழங்குகிறது. இவற்றில் ஆணுறை, வாய்வழி மாத்திரைகள், கருப்பையக சாதனங்கள்(IUD), ஊசி மருந்துகள் மற்றும் உள்வைப்புகள் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் ஆணுறை விநியோகம் 57 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய கருத்தடை அறிக்கை தெரிவிக்கின்றது.
மேலும், “கொள்முதலில் நிலவும் சட்டப் பிரச்சினை தீர்க்கப்பட்டால் இந்த பொருட்களை விரைவில் மீண்டும் நிரப்ப முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





