முன்னாள் துணையின் புகைப்படங்கள் மற்றும காணொளிகளை வெளியிட தடை!! இலங்கையில் கடுமையாகும் சட்டம்
சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
காதல் உறவுகளின் போது எடுக்கப்படும் தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், உறவு முறிந்த பிறகு அவர்களை துன்புறுத்தும் நோக்கத்துடன், சமூக ஊடகங்கள் மூலம் மற்றவர்கள் பார்க்கும் வகையில் அவற்றைத் தடுக்கும் நோக்கத்தில் விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலசினால் இந்த சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, முதன்முறையாக இதுபோன்ற குற்றத்துக்காக பிடிபடும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், இதுபோன்ற குற்றத்திற்காக இரண்டாவது முறையாக அல்லது மீண்டும் மீண்டும் பிடிபட்டால் அதற்குரிய தண்டனை அல்லது அபராதம் இரட்டிப்பாக்கப்படலாம் அல்லது தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் இரட்டிப்பாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





