ஐரோப்பா

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்கள் குடும்பத்தை அழைத்துவர தடை?

பிரித்தானியாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களின் குடும்பத்தாரை அங்கு அழைத்துவருவதை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் இது தொடர்பில் திட்டமிடுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தியால் கல்வி கற்கும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது பிரித்தானியாவில் முதுகலைப் பட்டம் பயிலும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையையும் பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்துச் செல்லலாம்.

அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் தங்க வருகைத்தரும் வெளிநாட்டவர் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

குறிப்பாகச் சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆக அதிகமாகப் பாதிக்கப்படுவர்.

ஆராய்ச்சி சார்ந்த முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்குப் புதிய மாற்றம் பொருந்தாது.

அதிகமான வெளிநாட்டவர் பிரித்தானியாவில் படிக்கவேண்டும் என்று விரும்புவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு கூறியது.

எனினும் அவர்களைச் சார்ந்து வருவோரின் எண்ணிக்கை கட்டுப்படியான அளவைக் கடந்துவிட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு அத்தகைய சுமார் 136,000 பேருக்கு விசா வழங்கப்பட்டதாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை 8 மடங்கு அதிகமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

அந்த விசா வைத்திருப்போர் பிரித்தானியாவில் வேலை செய்ய அனுமதி உண்டென அறிவிக்கப்படுகின்றது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்