இந்தியாவில் நிலவும் சீரற்ற வானிலை : 140 ரயில் சேவைகள் இரத்து!
இந்தியாவின் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருகின்றது.
இதன் விளைவாக இரு மாநிலங்களிலும் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து சிக்கல்களும் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 97 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆயிரக்கணக்கானோர் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளால் நிவாரண முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)