இலங்கையில் மோசமான வானிலை – தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்

மோசமான வானிலை காரணமாக மூன்று ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அவசர நிலை தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் இந்த ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் ஹிகுராக்கொட விமானப்படை தளங்களில் இந்த ஹெலிகொப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இரண்டு பெல் 212 ஹெலிகாப்டரும் எம்ஐ 17 ஹெலிகாப்டர்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.
பேரிடர் மேலாண்மை மையத்தின் அறிவிப்பின் பேரில் மீட்பு விமானப் படையும் தயார் நிலையில் உள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னரே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தொடர்பான அபாய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
(Visited 11 times, 1 visits today)