சிங்கப்பூரில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம் – விசாரணையில் வெளிவந்த தகவல்
சிங்கப்பூர் – புக்கிட் பாடோக்கில் உள்ள HDB வீட்டில் கடந்த 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிளாக் 179 புக்கிட் பாடோக் வெஸ்ட் அவென்யூ 8 இல் அந்த முதியவர் தனியாக வசித்து வந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
இந்நிலையில், முதியவரின் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வந்ததாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து அவர்கள் வந்துபார்த்தபோது முதியவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த முதியவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், இதனால் அவருக்கு கால்கள் வீங்கி, காயங்கள் இருக்கும் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக, அவர் ஒவ்வொரு இரவும் சூடான துண்டைப் பயன்படுத்தி தனது கால்களைத் தட்டுவார் என்றும், அந்த தட்டுதல் சத்தம் பக்கத்து வீடுகளுக்கும் கேட்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், 21ஆம் திகதி முதல் அக்கம்பக்கத்தினர் அந்த சத்தத்தை கேட்கவில்லை என கூறியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததை சிங்கப்பூர்க் காவல் படை உறுதிப்படுத்தியது. அந்த முதியவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.