இந்தியாவில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மண்ணுக்கு அடியில் இருந்து கேட்ட சத்தம்
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20 நாட்களான குழந்தை ஒருவரால் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஆடு மேய்த்து வந்த ஒரு நபர், மண்ணின் அடியில் இருந்து அழுகுரல் கேட்டதையடுத்து குழந்தையை கண்டுபிடித்தார்.
உடனே பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
தற்போது குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை புழுக்களால் கடிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன எனவும் மண்ணடியில் போதிய ஒக்ஸிஜன் கிடைக்கவில்லை எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெண் குழந்தைகளை இலக்காகக் கொண்ட கொலை முயற்சியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
பெண் குழந்தையைக் கொல்ல முயன்றவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.





