விளையாட்டு

விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மட்டும் கடைசி டி20 போட்டி  நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

விராட் கோலி சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த போட்டியில் 41 ரன்கள் எடுத்தன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராக ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். முதலிடத்தில் உள்ள ரோஹித் சர்மாவுக்கும் பாபர் அசாமுக்கும் வெறும் 39 ரன்களே வித்தியாசமாக உள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள்

ரோஹித் சர்மா – 4,231 ரன்கள்

பாபர் அசாம் – 4,192 ரன்கள்

விராட் கோலி – 4,188 ரன்கள்

பால் ஸ்டிரிலிங் – 3,655 ரன்கள்

மார்ட்டின் கப்டில் – 3,531 ரன்கள்

அண்மையில் நிறைவடைந்த டி20 உலக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

(Visited 37 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ