ரிலீஸ் ஆனது ‘பாகுபலி: தி எபிக்’! ஓடிடியில் மஹிழ்மதியின் பிரம்மாண்டம்.
உலகத்தையே வியக்க வைத்த ராஜமௌலியின் ‘பாகுபலி’ பிரபஞ்சம் இப்போது அனிமேஷன் வடிவில் ‘பாகுபலி: தி எபிக்’ (Baahubali: The Epic) என்ற பெயரில் ஓடிடியில்.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி உருவாக்கிய பிரம்மாண்டமான மஹிழ்மதி சாம்ராஜ்யத்தின் கதையை, அனிமேஷன் தொடராக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) நிறுவனம் தயாரித்துள்ளது.
இது பாகுபலி திரைப்படத்தின் தொடர்ச்சி அல்ல. அமரேந்திர பாகுபலி மற்றும் பால்வால்தேவன் ஆகியோரின் இளமைக்கால வீரதீரச் செயல்கள், அவர்கள் எப்படி போர் வித்தைகளைக் கற்றார்கள் மற்றும் மஹிழ்மதி சாம்ராஜ்யத்தின் ரகசியங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த அனிமேஷன் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

பாகுபலி: தி எபிக்’ (Baahubali: The Epic) அனிமேஷன் தொடரின் புதிய சீசன் டிசம்பர் 26, 2025 (நேற்று) முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. வாராவாரம் புதிய எபிசோட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத் திரைப்படத்தில் சர்வதேச தரத்திலான கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
பாகுபலி திரைப்படத்தைப் போலவே அக்க்ஷன் மற்றும் சென்டிமென்ட் நிறைந்த தொடராக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






