ஆஸ்திரேலியாவில் மென்மையான பிளாஸ்டிக் மறுசுழற்சி மீண்டும் தொடக்கம்
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருந்த மென்மையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் ஆஸ்திரேலியாவில் மீண்டும் தொடங்கியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் தாரியில் உள்ள ஐக்யூரினுவ் (iQRenew) ஆலையில், தேங்கிக் கிடந்த ஆயிரக்கணக்கான டன் பிளாஸ்டிக்குகள் தற்போது சுத்திகரிக்கப்படுகின்றன.
அதிநவீன இயந்திரங்கள் மூலம் இவை சிறு துகள்களாக்கப்பட்டு, பாட்டில்கள் மற்றும் வாளிகளாக மாற்றப்படுகின்றன.
மேலும், பிளாஸ்டிக்கை மீண்டும் எண்ணெயாக மாற்றும் புதிய வேதியியல் முறையும் இங்கு சோதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் உற்பத்திச் செலவு சற்று அதிகம் என்றாலும், சுற்றுச்சூழலைக் காக்க இது அவசியம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் சேகரிப்பு தொடங்கிவிட்டதால், நுகர்வோரும் இதில் பங்களிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.





