கம்போடியா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை
தாய்லாந்து மற்றும் கம்போடிய எல்லைப் பகுதிகளில் மோதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் தனது நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
கம்போடியாவின் சீயெம் ரீப் (Siem Reap) உள்ளிட்ட பல மாகாணங்களுக்கான பயணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியாவின் ஸ்மார்ட் ட்ராவெல்லர் (Smart Traveller) இணையதளம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் நிலவும் இராணுவ மோதல்கள், வன்முறை மற்றும் வெடிக்காத கண்ணிவெடிகள் காரணமாக பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கழிக்கப் பலர் கம்போடியா செல்வதால், எல்லைப் பகுதிகளுக்குப் பயணிப்பதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.





