இந்தியாவுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்
2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், கடந்த வாரம் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
ஒருநாள் தொடரை தொடர்ந்து நாளை கான்பெர்ராவில்(Canberra) உள்ள மனுக்கா ஓவல்(Manuka Oval) மைதானத்தில் முதலாவது T20 போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதலாவது போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா(Adam Zampa) விலகியுள்ளார்.
அவரது மனைவிக்கு 2வது குழந்தை பிறக்க உள்ளதால் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
மேலும், ஆடம் ஜம்பாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் தன்வீர் சங்கா(Tanvir Sangha) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.





