ஆப்பிரிக்கா செய்தி

15 மணி நேரம் வானில் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஆஸ்திரேலிய விமானம்

பாரிஸ் செல்லவிருந்த ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் எயார்லைன்ஸ் விமானம், 15 மணி நேரம் வானில் சுற்றியபின், மீண்டும் புறப்பட்ட இடமான பெர்த்திற்கு திரும்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான எயார்லைன்ஸ் நிறுவனமான குவாண்டாஸ் போயிங் கோ.787 பாரிஸ் செல்ல திட்டமிடப்பட்டு, நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி, இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு வானில் பறந்தது.

ஆனால், ஈரான்-இஸ்ரேல் பதட்டத்தால் திட்டமிட்ட இலக்கை அடைய முடியாமல் புறப்பட்ட இடமான பெர்த்திற்கு மீண்டும் திரும்பியது.

இது குறித்து குவாண்டாஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேல் -ஈரான் விவகாரத்தில் ஏவுகணைத் தாக்குதல் குறித்து விமான நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டபோது, போயிங் கோ.787 விமானம்,​​இந்திய வான்வெளியின் தென்மேற்கு எல்லை வரை சென்று கொண்டிருந்தது.

மேலும் 15 நேரமாக வானில் சுற்றிக்கொண்டே இருந்த நிலையில், விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நேற்று காலை 11 மணியளவில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தில் தரையிறங்கியது.

அதேபோல, பெர்த்திலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குச் சென்ற மற்றொரு விமானமும் பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இந்த இரண்டு விமானங்களிலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி