செய்தி விளையாட்டு

ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல்

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான மேக்ஸ்வெல் இதுவரை 149 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார். அதில், 126.7 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3,990 ரன்களை விளாசியுள்ளார். இதில் 23 அரைசதங்களும் அடங்கும். பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட மேக்ஸ்வெல் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

குறிப்பாக கடந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் 201 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது ஒருநாள் கிரிக்கெட்டின் மிக சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று என்று பாராட்டப்பட்டது.

தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மேக்ஸ்வெல், “2027ஆம் ஆண்டு நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை வரை தனது உடல் ஒருநாள் போட்டிகளில் ஒத்துழைக்காது. தான் அணியில் இருப்பது ஆஸ்திரேலியா அணிக்குதான் பின்னடைவுதான். அதனால் தான் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வை அறிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதே சமயம் 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவேன் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி