சர்ச்சையில் சிக்கிய கப்பல் நிறுவனம்: சுற்றுலாப் பயணி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் விபத்து
பாப்புவா நியூ கினியின் மொரோப் மாகாணக் கடற்கரைக்கு அப்பால், அவுஸ்திரேலியாவின் ‘கோரல் அட்வென்ச்சர்’ சுற்றுலா கப்பல் பவளப்பாறையில் மோதி தரைதட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தின் போது, கப்பலில் இருந்த 80 பயணிகள் மற்றும் 43 ஊழியர்கள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து, பயணிகள் அனைவரும் தனி விமானம் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
பலத்த நீரோட்டம் மற்றும் ஆபத்தான பவளப்பாறைகள் நிறைந்த பாதையில் கப்பல் சென்றதே விபத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கிரேட் பேரியர் ரீஃப் தீவில் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்தக் கப்பல் நிறுவனம் விசாரணைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு விபத்தைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





