நடிகராக அறிமுகமாகும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்

தெலுங்கில் ராபின்வுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படம் மார்ச் 28ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இப்படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
வார்னர், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது மைதானத்தில் வைத்தே புஷ்பா பட ஸ்டைலை செய்து காட்டி இந்திய ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்த நிலையில் டேவிட் வார்னர் தெலுங்கு திரைபடத்தில் நடிக்க உள்ளதாக நீண்டகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தன.
(Visited 25 times, 1 visits today)