சீனாவின் பாரிய போர் பயிற்சி குறித்து ஆஸ்திரேலியா, ஜப்பான் அதிருப்தி!
தாய்வானை Taiwan சுற்றியுள்ள பகுதியில் சீனா China பாரிய போர் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பில் ஆஸ்திரேலியா Australia கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் மேற்படி நடவடிக்கையானது பிராந்திய பதற்றத்துக்கு வழிவகுக்கும் என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, தாய்வான் மற்றும் சீன விவகாரமானது இராஜதந்திர முயற்சிமூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீன கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு தீவே தாய்வானாகும். எனினும், தாய்வான் தமது நாட்டில் ஒரு பகுதியென சீனா வாதிட்டுவருகின்றது.
இதனை தாய்வான் ஏற்க மறுக்கின்றது. தாம் இறைமையுள்ள நாடெனவும் வலியுறுத்திவருகின்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தாய்வானின் இறைமையை அங்கீகரிக்கின்றன.
“ தாய்வான் ஜலசந்தி முழுவதும் தற்போதைய நிலையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச நடவடிக்கையையும் தமது நாடு எதிர்க்கும்.” என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அதேவேளை, சீனாவின் போர் பயிற்சி தொடர்பில் ஜப்பானும் Japan கவலை வெளியிட்டுள்ளது.





