செய்தி விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அந்த வகையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 87.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

பின்னர், 85 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 349 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 435 ஓட்ட இலக்கை நிர்ணயித்தது.

இந்நிலையில், இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 102.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 352 ஓட்டங்களை பெற்றது.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு எதிரான 2025/26 ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதற்கு முன்னதாக 2023ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடர் சமநிலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!