ஆஸ்திரேலியா – வெள்ளத்தில் சிக்கி இந்திய பெண்ணொருவர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாகாணத்தின் மவுண்ட் இஷா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், தூதரக ரீதியான உதவிகளை செய்ய அவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
(Visited 17 times, 1 visits today)