ஆங் சான் சூகிக்கு மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு பொதுமன்னிப்பு வழங்கியது
இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மியான்மரின் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகிக்கு மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.
ஆங் சான் சூகி 2021 இல் இராணுவ சதிப்புரட்சி மூலம் வெளியேற்றப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
சுமார் 7000 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு எடுத்த முடிவின் கீழ் ஆங் சான் சூகியும் மன்னிக்கப்பட்டதாக மியான்மர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஆங் சான் சூகிக்கு 5 குற்றச்சாட்டுகளுக்காக மட்டுமே இராணுவ ஆட்சிக் குழு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் ஸ்கை நியூஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
5 குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டாலும் அவர் மீது மேலும் 14 குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய ஓராண்டு காலம் சிறையில் இருந்த ஆங் சான் சூகி நேற்று மற்றொரு அரசு கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
5 குற்றச்சாட்டுகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும் அவர் தொடர்ந்து வீட்டுக்காவலில் இருப்பார் என ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.