தென்கொரியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு – மீறினால் அபராதம் விதிக்கப்படும்!

தென் கொரிய விடுமுறை தீவான ஜெஜுவில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருவதால், புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை அரசாங்கம் வெளியிடவுள்ளது.
சுற்றுலா பயணிகள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள், மற்றும் அபராதம் தொடர்பான அறிவிப்புகளே வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டினரின் தவறான நடத்தை, குப்பைகளை கொட்டுவது மற்றும் குழந்தைகளை தெருவில் மலம் கழிக்க அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து உள்ளூர்வாசிகள் அளித்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது.
ன, ஆங்கிலம் மற்றும் கொரிய மொழிகளில் அச்சிடப்பட்ட இந்த வழிகாட்டி, நாட்டில் இதுபோன்ற முதல் முறையாகும் என்றும், இது கோடை காலத்தில் வருகிறது என்றும் உள்ளூர் காவல்துறை கூறுகிறது.
கொரிய தீபகற்பத்தின் தெற்கே உள்ள எரிமலைத் தீவான ஜெஜு, அதன் கடற்கரைகள், நடைபாதைகள் மற்றும் காற்று வீசும் மலைக் காட்சிகளுக்கு பிரபலமானது. வெளிநாட்டு பார்வையாளர்களும் ஷாப்பிங் மற்றும் சூதாட்டத்திற்காக ஜெஜுவுக்கு வருகிறார்கள்.