இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசை திருப்ப முயற்சி – பிள்ளையான்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலேயே ‘செனல்-4’ காணொளியும் அசாத் மௌலானவின் கருத்தும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்யைான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த காணொலியில் இடம்பெற்றுள்ள கருத்துக்களையும் அவர் மறுத்துள்ள அவர் அத்தகைய சூழ்நிலையை மீளவும் உருவாக்குகிறார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

செனல்-04 வெளியிட்டுள்ள காணொலி குறித்து இன்று (06.09) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ தன்னுடன் இணைந்து பயணித்திருந்த அசாத் மௌலானா  வெளிநாடொன்றில் தஞ்சமடைந்துள்ளதால் அவரது புகலிட கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள பல போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார் எனவும்  அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

செனல்-4 வெளியிட்டுள்ள இந்த காணொளி பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதுடன் செனல்-4 தொலைக்காட்சி கடந்தகாலத்தில் இலங்கையில் என்ன செய்தது என்பதையும் அனைவரும் நன்கு அறிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரித்த அவர், இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ அமைப்பினர் பொறுப்பேற்றிருந்ததாகவும், அவர்களுடைய உத்தியோகப்பூர்வ இணையத்தளமான அமாதில் இந்த விடயங்கள் சுட்டிகாட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்னமும் தீர்வுகள் கிடைக்காதுள்ள நிலையில் அசாத் மௌலான  இந்த விடயத்தை மறுபக்கம் திருப்ப பார்க்கிறார் எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாக கொண்டு பொய்யான விடயங்களை பேசிக்கொண்டிருக்க கூடாது எனவும்  வெளிநாடு செல்பவர்கள் அங்கு தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள பொய்யான தகவல்களை வெளியிடுவாதாவும் அதையே இவரும் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்