இஸ்ரேலின் நகர்ப்புறங்களில் தாக்குதல்கள் தீவிரம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலின் நகர்ப்புறங்களில் ஏற்படக்கூடிய தாக்குதல்கள் குறித்து இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நகர்ப்புறங்களில் ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஹைஃபா நகரில் ஏவுகணைத் தாக்குதலில் பழமையான மசூதிகளில் ஒன்று தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையில் நாட்டில் தங்கியிருந்த இரண்டு பேரும் நேற்று இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக தூதர் மேலும் தெரிவித்தார்.





