சுத்தியலால் தாக்கி லண்டனில் உள்ள நகைகள் கடையில் கோடிக்கணக்கான நகை கொள்ளை : மக்களின் கவனத்திற்கு!

லண்டனில் உள்ள நகைக் கடையொன்றின் பணியாளர்கள் கொள்ளை கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளையடிப்பவர்கள் பணியாளர்களை சுத்தியலால் தாக்கி காயப்படுத்தி கொள்ளையடித்து சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய் கிழமை நண்பகலில் செல்சியாவில் உள்ள சிட்னி தெருவில் உள்ள கடைக்குள் முகமூடி அணிந்த இருவர் மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கவுண்டர்களை அடித்து நொறுக்கியதுடன், நபர் ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பழங்கால நகைகளில் நிபுணத்துவம் பெற்ற போர்பன்-ஹான்பி என்ற கடையில் இந்த கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)