பாகிஸ்தானில் சுரங்க தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் : 20 பேர் பலி!
பாகிஸ்தானின் தென்மேற்கில் துப்பாக்கி ஏந்திய சுரங்கத் தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 07 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற சமீபத்திய தாக்குதலாகும்.
இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஹமாயுன் கான் நசீர், துப்பாக்கி ஏந்திய நபர்கள் வியாழன் இரவு துகி மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான ஆண்கள் பலுசிஸ்தானின் பஷ்டூன் மொழி பேசும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் மூன்று பேர் மற்றும் காயமடைந்தவர்களில் நான்கு பேர் ஆப்கானிஸ்தாiன சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சுதந்திரத்தை விரும்பும் பிரிவினைவாத குழுக்களின் தாயகமாக இந்த மாகாணம் உள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள கூட்டாட்சி அரசாங்கம் எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த பலுசிஸ்தானை உள்ளூர் மக்களின் இழப்பில் நியாயமற்ற முறையில் சுரண்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து மோதல்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.