முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்கக் கொள்கலக் கப்பல் மீது தாக்குதல் – பொறுப்பேற்ற ஹௌதிக் குழு

அமெரிக்கக் கொள்கலக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதற்கு ஹெளதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

நேற்று ஏடன் (Aden) வளைகுடாவில் ஏமன் அருகே கப்பலின்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கப்பலுக்குக் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாகவோ அதில் இருந்தோர் காயமடைந்ததாகவோ தகவல் இல்லை என கூறப்படுகின்றது.

செங்கடலில் அமெரிக்கப் போர்க்கப்பல்மீது பாய்ச்சப்பட்ட ஏவுகணை ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டுவீழ்த்தியது. அதற்கு மறுநாள் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.

ஈரான் ஆதரவிலான ஹெளதி கிளர்ச்சிக் குழு செங்கடலில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திவருகின்றன. காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்காக அவ்வாறு செய்வதாய் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் கூறினர்.

அமெரிக்க,பிரித்தானிய படைகள் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளன. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (12 ஜனவரி) 60க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்