போலந்தில் விவசாயிகளின் போராட்டத்தில் பொலிஸார் மீது தாக்குதல்!
போலந்து – வார்சாவில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், போலிஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் போலத்தில் தலைநகரில் ஒன்றுக்கூடிய விவசாயிகள் பொலிஸாரின் தடைகளை உடைத்து உட்செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகள் மற்றும் உக்ரேனில் இருந்து வரும் உணவு இறக்குமதிகள் தங்கள் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவதாகக் கூறும் விவசாயிகள் சமீபத்திய வாரத்தில் போராட்டங்களை அதிகரித்துள்ளனர்.
சிலர் ஐரோப்பிய ஒன்றியக் கொடியை மிதித்து, “விவசாயி” என்ற வாசகத்தைத் தாங்கிய போலி சவப்பெட்டியை எரித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்ப்பாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமை ஒப்பந்தத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று கோருகின்றனர், இது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் திட்டமாகும்